2013 ஆம் ஆண்டுஏப்றல் மாதம் 03 ஆந் திகதிமுதல் பயன்வலுப்பெறும் வகையில் மதுசாரம் (ஈதைல் அற்ககோல்) தொடர்பில் அறவிடப்பட்ட மது வரியானதுதிருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன், அத்திருத்தங்கள்  2013.04.03 ஆந் திகதிய 1804/16 ஆம் இலக்கஅதிவிசேடவர்த்தமானிஅறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க...

 

சிகரெட், மதுபானம் மற்றும் மதுசாரம் (அல்கஹோல்) என்பனவற்றின் மீதானஉற்பத்திவரிதிருத்தியமைக்கப்பட்டுள்ளது

2012 ஒக்தோபர்மாதம் 06 ஆந் திகதிமுதல் பயன் வலுப்பெறும் வகையில், சுகரெட், மதுபானம் மற்றும் மதுசாரம் (அல்கஹோல்) என்பனவற்றின் மீதானஉற்பத்திவரியானதுதிருத்தியமைக்கப்பட்டுள்ளது. புதியவரிவிகிதங்கள் 2012.10.05 ஆந் திகதிய 1778/40, 1778/41 மற்றும் 1778/42 இலக்கங்களைக் கொண்டவர்த்தமானிஅறிவித்தல்களில்  வெளியிடப்பட்டுள்ளன. (மேலும்….)

 

இலங்கை மற்றும் ஜெர்மனி நாட்டுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாக முடிவூற்றுள்ளது

இலங்கை மற்றும் ஜெர்மனி நாட்டுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தொடHபிலான உடன்படிக்கை(Agreement for the Avoidance of Double Taxation) இல் திருத்தங்களை மேற்கொள்வதற்காக  நடைபெற்ற கலந்துரையாடல் 2012ஓகத்து மாதம் 24ஆந் திகதி வெற்றிகரமாக முடிவூற்றது. இக்கலந்துரையாடல் இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் ஓகத்து மாதம் 20முதல்  24ஆந் திகதி வரை நடைபெற்றது.

உண்ணாட்டரசிறைத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளH நாயகம் டப்.பீ.ஏ. செனவிரத்ன அவர்கள் இலங்கைக் குழுவிற்குத் தலைமை தாங்கியதுடன் ஜெர்மனி நாட்டுப் பிரதி நிதிகளுக்காக அந்நாட்டு நிதி அமைச்சின் கலாநிதி வொல்ப்கென்க் லாஸார்ஸ் (Dr. Wolfgang Lasars) அவர்கள் தலைமை தாங்கினார். இக்கலந்துரையாடலில் நிதிஇ திட்டமிடல் அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என்பனவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

 

2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அரசிறை செயலாற்றுகை

“அரசிறை செயலாற்றுகையானது 2011 இல் குறிப்பிடத்தக்களவு அதிகமாகக் காணப்பட்ட நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளடங்கலாக 2012 பெப்ரவரியில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கத்தினைக் கருத்திற்கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.  இந்நடவடிக்கைகளானது பாரியளவிலான நாணயமாற்று விகித நெகிழ்வுத்தன்மை, மத்திய வங்கியின் பூட்கை விகிதங்களில் அதிகரிப்பினூடாக நாணயக் கொள்கையினை இறுக்கமாக்குதல் மற்றும் வங்கி வரவு வளர்ச்சி உபாயங்களின் ஊக்குவிப்பு அதேபோல் உள்நாட்டு பெற்றோலியம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து விலைகளில் திருத்தங்கள் சர்வதேச சந்தையில் அபிவிருத்தியினை பிரதிபலிக்கும் வகையில் காணப்பட்டன.  இந்நடவடிக்கைகள் குறித்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களின் போது  நாணயமாற்று விகித நெகிழ்வுத்தன்மையில் ரூபா பெறுமதி இறக்கத்திற்கு உட்படுத்தப்பட்டமை என்பன அரசாங்கத்தின் அரசிறை செயற்பாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தின”. இன்னும்…

 

இலங்கைக்கும் உக்ரேன் நாட்டிற்குமிடையே இரட்டை வரி தவிர்ப்பு தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முடிவுற்றன

 

இலங்கை மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையே உத்தேசிக்கப்பட்ட இரட்டை வரி தவிர்ப்பு தொடர்பிலான உடன்படிக்கை 2012ஏப்ரல் மாதம் 27ஆந் திகதி வெற்றிகரமாக முடிவுற்றது. இக்கலந்துரையாடல்கள் இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் ஏப்ரல் 25முதல்  27ஆந் திகதி வரை நடைபெற்றன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர்நாயகம் திரு. எச்.பீ.ஏ. செனவிரத்ன அவர்கள் இலங்கைக் குழுவிற்குத் தலைமை தாங்கியதுடன் உக்ரேன் நாட்டுப் பிரதிநிதிகளுக்காக அந்நாட்டு நிதி அமைச்சின்  சர்வதேச வரி விதிப்பனவு மற்றும் உடன்படிக்கைப் (வரி மற்றும் சுங்கம்) பிரிவின் தலைவர் செல்வி. பீ.எல். ஒலெக்ஸ்ஸண்டிரிவானா அவர்கள் தலைமை தாங்கினார்.

 

மதுபானம் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது

மதுபானத்தின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட வரி வருமானத்தினை உறுதி செய்வதற்காக வருடாந்தம்  கால அடிப்படைமயில் மேற்கொள்ளப்படும் வரித் திருத்தங்களுக்கு அமைவாக 2012.மார்ச். 30 ஆந் திகதி முதல் பயன்வலுப் பெறும் வகையில் வைன், சாராயம், வெளிநாட்டு சாராயம் மற்றும் மாவறல் மதுபானம் (பியர்) என்பனவற்றுக்கான மதுவரித் தீர்வையானது கீழ்க் காட்டப்பட்டுள்ளவாறு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவரம்

 

லீற்றருக்கான அங்கீகரிக்கப்பட்ட தீர்வை

முன்னைய தீர்வை (ரூபா)

புதிய தீர்வை (ரூபா)

பனங்கள்ளு அல்லது ஏதேனும் காய்ச்சி வடித்தல் மூலம் தயாரிக்கப்பட்ட மதுபானம் தவிர்ந்த மதுபானம்

778/=

838/=

வெல்லப்பாகுஇ பனஞ்சாராயம்இ தென்னை மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயம்

923/=

 

983/=

 

இலங்கையில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு சாராயம்

1,063/=

1,123/=

மாவறல் மதுபானம் (சுத்த மதுபானச் செறிவின் ஐந்து வீதத்திற்கு (5%) கீழ்

85/=

90/=

மாவறல் மதுபானம் (சுத்த மதுபானம் செறிவின் ஐந்து வீதத்திற்கு (5%) மேல்

101/=

106/=

 

குறிப்பு: ஏற்றுமதி செய்யப்படும் மதுசாரங்களுக்கு இம்மதுவரித் தீர்வை செல்லுபடியாகாது.

மேற்குறிப்பிடப்பட்ட புதிய வரி விகிதங்கள் 2012.03.03 ஆந் திகதிய 1751/29 ஆம் இலக்க வர்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்...

 

 

2011ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.0% ஆல் வளர்ச்சி கண்டுள்ளது

நாட்டின் பொருளாதாரமானது,வெளிச் சக்திகளின் கட்டுப்பாடுகள்  மற்றும் உள்நாட்டில் வளர்ச்சியடைந்த  துறைகளின் ஆதரவு என்பனவற்றுடன், 2010ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவு செய்த  7.8% பெருளாதார வளர்ச்சியோடு ஒப்பிடுகையில்  2011ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 8.0% பொருளாதார வளாச்சியினைப் பதிவாக்கியது.வருட ஆரம்பத்தில் நிகழ்ந்த வெள்ள அனர்த்தம் விவசாயத் துறை மற்றும் ஏனைய துணைத் துறைகளில் பின்னடைவினை உண்டுபண்ணியிருந்தும் கூட, 2011ஆம் ஆண்டின்  முதல் அரையாண்டில் மொத்தத் தேசிய உற்பத்தியில் இவ்வளர்ச்சியினைக் காட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.(……….)

 

2011வரவு செலவுத் திட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட வரி மறுசீரமைப்புக்கள்

2010நவம்பரில் சமHப்பிக்கப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் வரி முறைமையில் நீண்ட காலமாக உணரப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக பாரிய மறுசீரமைப்பு முன்னெடுப்புக்கள் உள்வாங்கப்பட்டன. தற்போதைய மறுசீரமைப்பு முன்னெடுப்புக்கள் சரளமானதும் அகல் விரிவு தன்மையினை நோக்கியதும் அடிப்படை மாற்றங்களுடன் நெகிழ்ச்சியுறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக் குழுவின் பரந்த வழிகாட்டல் மற்றும் பாத்தியுடையோர்களது விரிந்த ஆலோசனை முறைமை என்பனவற்றினையும் இவை அடிப்படையாகக் உள்ளடக்கியுள்ளது.

 

2011ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசிறைச் செயற்பாடுகள்

அரசாங்க வருமானம்:

  • பெயரளவில், 2010ஆம் ஆண்டை விடவும் இவ்வாண்டின் முதல் அரையாண்டில்  நாட்டின் மொத்த வருமானமானது 21.1%ஆல் ரூபா பில்430.3ஆல் அதிகரித்துள்ளது.அவ்வாறே, வரி வருமானமானது 22.4%ஆல் ரூபா பில். 3787.4ஆலும் வரியல்லா வருமானமானது11.9%ரூபா. பில்.51.9ஆலும் அதிகரித்துள்ளது. இக் காலப்பகுதியில் 2010ஆம் ஆண்டில் பதிவாகிய மொத்த வரி வருமான 43.5%உடன் ஒப்பிடுகையில் 2011ஆம் ஆண்டுக்காக மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையில் 44.7% ஐ காட்டியது.
  • 2011ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மொ.தே.உ சதவீதத்தில்  மொத்த அரச வருமானமானது 2010ல் பதிவாக்கிய 6.3% லிருந்து 6.7%க்கு அதிகரித்துள்ளது.

 

Free business joomla templates