2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல்களுக்கான உரிமைச் சட்டம்

தகவல் அலுவலர்

திருமதி. பீ.எல்.ஜே. குணரத்ன

பிரதிப் பணிப்பாளர்

தொலைபேசி இலக்கம்: (+94)0112151410

மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்

எச்.ஜீ. சுமனசிங்ஹ

பணிப்பாளர் நாயகம்

முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்

தொலைபேசி இலக்கம்: (+94)0112484640

 மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.                                   மேலும் வாசிக்க


 

அரச துறையில் மனிதவள அபிவிருத்திக்காகப் பங்களிப்புச் செய்யும் பிரதான திணைக்களமான முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்,பயனுறுதிமிக்க மனிதவள அபிவிருத்தியினூடாக தரமான அரச சேவையொன்றை நிறுவுவதற்கும்,அதனைத் தொடர்ந்து பேணுவதற்கும் கவனம் செலுத்துகின்றது.

அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் முழுமையாக அரசுக்குச் சொந்தமான கம்பனிகளின் ஊழியர்களுக்கு 2013ஆம் ஆண்டிற்கான மிகையூதியங்களைச் செலுத்துதல. மேலும்

 

 புதன்கிழமை, 02 ஜனவரி 2013 12:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் பிரகாரம் கொடுப்பனவுளை அதிகரித்தல்தொடர்பான சுற்றறிக்கை

2013 வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் பிரகாரம் அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் முழுமையாக அரசுடமையாக்கப்பட்ட கம்பனிகள் மற்றும் முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை இல.33 இன் மூலம் உள்வாங்கப்படுகின்ற கருத்திட்ட பணிக்குழுவினர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்யும்  முகமாக முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை இல.48 வெளியிடப்பட்டுள்ளது.  அதன் பிரகாரம் மேற் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் பணிக்குழுவினர்களில் அந்தந்த உத்தியோகத்தர்கள் / பணியாட்கள் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவுகளற்ற மாதாந்த அடிப்படை சம்பளத்தின் 5 சத வீதமான விசேட கொடுப்பனவொன்று 2013 ஆம் ஆண்டிலிருந்து கீழ்க் குறிப்பிட்டவாறு செலுத்தப்பட வேண்டும்.

 

சம்பள அளவின் ஆரம்ப சம்பளம் (மாதாந்தம்)

நடைமுறைப்படுத்தப்படும் திகதி

அதிகரிக்கும் நிதித் தொகையிலிருந்து செலுத்தப்பட வேண்டிய சதவீதம்

ரூபா 24,725/-க்குக் குறைந்த

2013.05.01

50%

2013.09.01

எஞ்சிய 50%

ரூபா 24,725/-க்குக் மற்றும் அதற்குக் கூடிய

2013.07.01

50%

2013.10.01

எஞ்சிய 50%

 

நாளாந்த சம்பள அடிப்படையில் பணிபுரியும் பணியாட்களுக்கு இக்கொடுப்பனவானது ஒவ்வொரு மாதத்திலும் பணி புரிந்துள்ள ஒவ்வொரு தினத்துக்கும் 1/30 அடிப்படையில் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுக்கு  அமைவாக செலுத்தப்படல் வேண்டும்.

 

புதன்கிழமை, 19 டிசம்பர் 2012 08:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

அரச தொழில் முயற்சிகளில் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளங்களைக் கட்டம் கட்டமான அடிப்படைக்கு தொடர்புபடுத்தல்

அரச நிர்வாக சுற்றறிக்கை இல. 06/2006 (iv)இன் பிரகாரம் செய்யப்பட வேண்டிய சம்பள பரிவர்த்த செய்தல் 2011 வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் பிரகாரம்அரச நிர்வாக சுற்றறிக்கை இல.28/2010 இன் மூலம்பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

அரச நிர்வாக சுற்றறிக்கை இல. 06/2006 (iv) இற்கு நேரிடையாக அரச தொழில் முயற்சிகளின் பணியாளர்களுக்கான சம்பள பரிசீலனை, முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 30 (1) இன் மூலம் செய்யப்பட்டுள்ளது.

முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 30 (i) குறிப்பிடப்பட்ட சம்பளக் கட்டம் கட்டமான முறைமையின் மீள் பரிசீலனைக்காக முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை 43 (i) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் மூலம் முன்னா சம்பளப் பரிவர்த்தனையின் போது பணியாளர்களுக்கு ஏற்பட்ட நிதி தொடர்பான அசெளகரியங்களை சரிசெய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றறிக்கை இல.43 (i)

 

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2012 09:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

விரைவான அபிவிருத்தியடைகின்ற பிராந்தியங்களுக்கான கருத்திட்டங்களை (JICA இலக்காகக் கொண்ட அடிப்படை சமூக சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்திட்ட அமுலாக்கல் பிரிவிற்கான/ பதவியணியினை அனுமதித்தல்

ஜப்பான் அரசாங்கமானது (JICA) திட்டத்தின் மூலமாக கிழக்கு/மத்திய/வடமேல் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் அடிப்படை சமூக சேவைகளை அபிவிருத்தி/மேம்படுத்தும் கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு இணங்கியூள்ளது.
நான்கு விரைவான அபிவிருத்தி அடைகின்ற பிராந்தியங்களுக்கான கருத்திட்ட அமுலாக்கல் அலகுகளுக்கான அனுமதியானது கீழ்வருமாறு வழங்கப்படுகின்றது.

 

இல. பதவிப் பெயர் பதவிகளின் எண்ணிக்கை
01 கருத்திட்ட முகாமையாளர் 01
02 பிரதி முகாமையாளர் (நிருவாகம்) 01
03 கருத்திட்ட பொறியியலாளர் 01
04 கருத்திட்டக் கணக்காளர் 01
05 கட்டிடக் கலைஞர் 01
06 தொழில்நுட்ப உத்தியோகத்தர் 02
07 முகாமைத்துவ உதவியாளர் 02
08 அலுவலக சேவையாளர் 01
  மொத்தம் 10

 

 

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012 14:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எங்ளை அழைக்கவும் – 011 2484477

முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்

Free business joomla templates