இந்துமா சமுத்திர பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கையை நிதிக்கேந்திர நிலையமாக தரமுயாத்துவதே சமகால அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் மங்கள சமரவீர.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கையை ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட நிதி, மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர்  தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை அண்மையில் மேற்கொண்டார்

Read more: இந்துமா சமுத்திர பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கையை நிதிக்கேந்திர நிலையமாக தரமுயாத்துவதே சமகால...

“த பேங்கர்” விருதானது நாட்டின் நிதியொழுக்கம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெற்ற பாராட்டு

“த பேங்கர்“ சஞ்சிகை, ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதியமைச்சராக தம்மைத் தெரிவு செய்தமையானது நாட்டில் பேணப்படுகின்ற நிதியொழுக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெற்றிருக்கும் பாராட்டு என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் தெரிவித்தார்.
இந்த விருது நான் பெற்ற தனிப்பட்ட வெற்றி அல்ல. மாறாக முழு நாடும் பெற்ற வெற்றி என்றும் நிதியமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களதும் வழிகாட்டல்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக  முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள்  சர்வதேச மட்டத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்றும் அவ்வாறான பாராட்டுக்களில் இதுவும் ஒன்று எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் கூறினார்.

Budget Speech 2017

Budget Speech 2017

Sinhala       Tamil       English

 

Fiscal Management Report 2017

Sinhala       Tamil       English

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களை “த பேங்கர்“ சஞ்சிகை அறிவித்துள்ளது.

புதிய பொருளாதார மறுசீரமைப்பு யுகத்தை நோக்கி இலங்கையை இட்டுச் செல்லுதல் மற்றும் அதன் நிமித்தம் சமூகத்தின் மன நிலையை மேம்படுத்துதல் என்பவற்றுக்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல நிதிச் சஞ்சிகையான “த பேங்கர்“ சஞ்சிகை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் அறிவித்துள்ளது.

Read more: ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா...

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பமானது….

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இணையாகப் பொது நலவாய அமைப்பின் நிதியமைச்சர்கள் சந்திப்பு கடந்த 06 ஆம் திகதி ஐக்கிய அமெரிக்காவின் வொஷிங்க்டன் நகரில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது உலகப் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியமை, காலநிலை மாற்றத்திற்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நிதியை தயார்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களும் கலந்து கொண்டார். இச்சமயம் இலங்கைக்கு உச்ச மட்ட பாராட்டுக்கள் கிடைக்கப் பெற்றதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் குறிப்பிட்டார்.

Read more: உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாடு ஆரம்பமானது….

Page 1 of 32

Free business joomla templates