ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்களை “த பேங்கர்“ சஞ்சிகை அறிவித்துள்ளது.

புதிய பொருளாதார மறுசீரமைப்பு யுகத்தை நோக்கி இலங்கையை இட்டுச் செல்லுதல் மற்றும் அதன் நிமித்தம் சமூகத்தின் மன நிலையை மேம்படுத்துதல் என்பவற்றுக்காக மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டும் வகையில் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல நிதிச் சஞ்சிகையான “த பேங்கர்“ சஞ்சிகை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் அறிவித்துள்ளது.

சர்வதேச நிதித் துறையில் பெயர் பெற்றுள்ள இச்சஞ்சிகை, பிரித்தானியாவின் இலண்டன் நகரிலிருந்து வெளி வருகின்றது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியைச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து, அதனை நிலைபேறு தன்மைக்கு கொண்டு வரவென முடிந்தமையைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் தான் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த நிதியமைச்சராக அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றார்.
இது தொடர்பில் இச்சஞ்சிகை தெரிவித்திருப்பதாவது, அமைச்சர் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தில்  சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைக் கடனாகப் பெற்றுக் கொண்டார். அதன் மூலம் கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்படக் கூடிய நிதி நெருக்கடியைத் தவிர்த்துக் கொண்டார். நாட்டின் நிதி இருப்பை உறுதியான நிலைக்கு கொண்டு வந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச மூலதனச் சந்தைக்கு முன்வைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை பணமுறி வழங்கலானது, அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் தம் இலக்கைத் தாம் உண்மையாகவே அண்மித்து விட்டதையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மேலும் நாட்டின் நிதித்துறையில் உறுதியான நிலையை ஏற்படுத்தி 2015 ஆம் ஆண்டில் காணப்பட்ட 7 வீத வரவு செலவுத் திட்ட இடைவெளியை 2016 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட்ட 5.6 வீதத்தையும் விட அதாவது 5.4 வீதம் வரைக் குறைப்பதற்கு நிதியமைச்சர் பதவிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கா நியமிக்கப்பட்ட பின்னரே முடிந்துள்ளது எனவும் அச்சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் 1,205 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட இலங்கையின் வருமானத்தை 2015 ஆம் ஆண்டில் 1,461 பில்லியன் ரூபா வரை அதிகரிக்க முடிந்துள்ளது. இக்காலப் பகுதியில் வரி வருமானம் 1,050 பில்லியன் ரூபாவிலிருந்து 1,356 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவது பிழையான பழக்கம் அல்ல. நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக ஆற்ற வேண்டிய பணி அது என்பதை மக்களின் உள்ளங்களில் பதியச் செய்ய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள “ த பேங்கர் ” சஞ்சிகை அரசாங்கத்தில் தங்கி இருக்க எதிர்பாராமல் ஏதாவது வரியைச் செலுத்த வேண்டும் என்பதும் அதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதையும் இச்சஞ்சிகை குறிப்பிட்டு கூறியுள்ளது. இதன் பிரதிபலனாக 2015 ஆம் ஆண்டில் 07 இலட்சமாகக் காணப்பட்ட இலங்கையில் வரி செலுத்துவோரின் ஆவணக் கோவைகள், தற்போது 14 இலட்சம் வரையும் அதிகரித்திருக்கின்றது என்பதையும் அச்சஞ்சிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Free business joomla templates