“த பேங்கர்” விருதானது நாட்டின் நிதியொழுக்கம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெற்ற பாராட்டு

“த பேங்கர்“ சஞ்சிகை, ஆசிய - பசுபிக் பிராந்தியத்தின் சிறந்த நிதியமைச்சராக தம்மைத் தெரிவு செய்தமையானது நாட்டில் பேணப்படுகின்ற நிதியொழுக்கத்திற்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கப் பெற்றிருக்கும் பாராட்டு என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் தெரிவித்தார்.
இந்த விருது நான் பெற்ற தனிப்பட்ட வெற்றி அல்ல. மாறாக முழு நாடும் பெற்ற வெற்றி என்றும் நிதியமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களதும் வழிகாட்டல்களின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக  முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள்  சர்வதேச மட்டத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்றும் அவ்வாறான பாராட்டுக்களில் இதுவும் ஒன்று எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கா அவர்கள் கூறினார்.

Free business joomla templates