இந்துமா சமுத்திர பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கையை நிதிக்கேந்திர நிலையமாக தரமுயாத்துவதே சமகால அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் மங்கள சமரவீர.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் மத்தியில் இலங்கையை ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்ட நிதி, மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னர்  தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை அண்மையில் மேற்கொண்டார்

தென் கொரியா நாட்டின் தீவான ஜெய்புவில் நடைபெற்ற ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடர்பான மாநாட்டில் முதன்முறையாக கலந்துகொண்டார்.
இந்த மகாநாடு தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 16ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை  நடைபெற்றது.
இதன்போது ஆசிய உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் நிதி தொடர்பான ஆளுநர் மாநாட்டிலும் அமைச்சர் கலந்துகொண்டார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய உட்கட்டமைப்பு விடயங்கள் குறித்தும் அமைச்சர் தளிவுபடுத்தினார்.
அபிவிருத்தி தொடர்பில் மனிதவள உட்கட்டமைப்பிற்கு நிர்வாக ரிதியில் மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் சட்டவாக்க ரீதியில்  உறுதிசெய்யப்படவேண்டிய கொள்கை ஒழுங்குறுத்த வேண்டியவற்றிற்கான ஒத்துழைப்புடன் பொது மற்றும் தனியா முதலீடுகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இந்து சமுத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி மற்றும் பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் இலங்கையை இட்டுச்செல்வதற்காக ஏற்றுமதித்துறையில் நாட்டை மேம்படுத்துவதுடன் இந்துமா சமுத்திரத்தில் நிதிக்கேந்திர நிலையமாக இலங்கையை வளம்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சா கூறினார்.
இந்த இலக்குகளை அரசாங்கம் அடைவதற்காக பொருளாதார துறைகளில் பல முக்கிய விடயங்களில் மறுசீரமைப்பிற்கான நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டிருப்பதுடன் அந்த இலக்கை அடைவதற்கான வசதிகளுடன் பொருளாதார துறையில் முக்கியத்துவம் வகிக்கும் தனியார் துறையின் வளார்ச்சிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
புதிய வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் பொருளாதார கொள்கை வரி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இதற்கான மாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு முதலீட்டிற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்ற சவால்களில் விசேடமாக வெள்ள அனர்த்தம் போன்றவற்றிற்கு கடந்த இருவாரங்களிற்கு முன்பு இலங்கையும் எதிர்கொண்டது.   
காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய சவாள்களுக்கு ஈடுகொடுக்க வேண்டிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சவாலை நாம் எதிர்கொள்ளவேண்டுமாயின் காலநிலை மாற்றம் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து உட்கட்டமைப்பு திட்டங்களையும் மேம்படுத்தவேண்டும் என்று அமைச்சா  மேலும் தெரிவித்தார்.

 

 

Free business joomla templates